சமூக வலைதளம் பயன்படுத்த தடை..!

ஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சிறுவர் சிறுமிகளின் வயது வரம்பை அதிகரிக்க அந்நாட்டு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தற்போதுள்ள சட்டத்தின்படி 13 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தியுள்ளது.

 

இதை 16 வயதாக அதிகரிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதிக நேரம் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதால் மனரீதியாக பாதிக்கப்படுவது, படிப்பில் கவனம் குறைவது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இளம் பருவத்தினர் உள்ளாகின்றனர்.

 

11 வயது முதல் 15 வயது வரை மனிதர்களின் மூளை அதிக அளவு வளர்ச்சி பெறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே சமூக வலைதளத்தை பயன்படுத்தும் வயது வரம்பை 16 ஆக உயர்த்த ஆஸ்திரேலியா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.