வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்..!
ரஷ்யாவில் உள்ள வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளானது. ரஷ்யாவின் தென்மேற்கு கடுகா பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை ஓட்டிய விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





