--- --:--:-- --

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவன்.. மகனை போலீசிடம் ஒப்படைத்த தந்தை..!

4

கஞ்சா போதைக்கு அடிமையான தனது மகனை காப்பாற்றுமாறு அரசு பள்ளி மாணவர் ஒருவரின் தந்தை விருத்தாச்சலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க வலியுறுத்தி இருக்கிறார். சிறுவர் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

அரசு பள்ளி மாணவர் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பணத்தை தன் தந்தைக்கு தெரியாமல் எடுத்து சக நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதாக சொல்லப்படுகிறது.

 

இந்த சம்பவத்தில் பரணி என்பவர் மூலம் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சுமத்தி இருக்கும் சிறுவனின் தந்தை இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உறுதி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon