ராமநாதபுரத்தில் குளோரின் வாயு கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல்..!
காயல் கொடியில் விஷ வாயு பரவியதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் காயல்கொடி பேருந்து நிலையம் அருகே திடீரென விஷவாயு பரவுவதாகவும் இதில் மயக்கம் அடைந்ததாகவும் தகவல் பரவியது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீட்டை காலி செய்து ஓட்டம் எடுத்தனர். சாயல்குடி பகுதி முழுவதும் பரவிய இந்த தகவலால் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சாயல்குடி பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்கு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் பல நாட்களாக பயன்பாடு இல்லாத நிலையில் கிடந்த குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. பலருக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது .
பின்னர் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை தீயணைப்பு துறையினர் சரி செய்த நிலையில் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





