ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர்..!
சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி திருமலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் ரவுடி திருமலையும் ஒருவர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் சுட்டு கொன்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரை தொடர்ந்து சென்னை வடக்கு சூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை அருகே திருச்சி ரவுடி துரை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் போலீசாரின் அடுத்தடுத்த என்கவுன்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




