--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த கார்..அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து..!

2

ஆம்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பத்தூரைச் சேர்ந்த நபர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

 

ஆம்பூர் அருகே சென்ற பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதன் காரில் இருந்த பிரகதீஸ்வரன் தாய் உயிரிழந்தார் அப்பொழுது காரருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளான கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.

 

அப்பொழுது சொகுசு பேருந்துக்கு பின்னால் வந்த சுற்றுலா வேன் மீது பேருந்து மோதி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வானில் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

அவர்களை மீட்டு வாகன ஓட்டிகள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று தகவல் அளிக்க சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon