உணவகத்தில் சாப்பிட்ட 7 பேருக்கு உடல் நல பாதிப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உணவகத்தில் சாப்பிட்ட 7 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஏழு பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட உணவகத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் சாப்பிட்ட சட்னியில் பல்லி இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





