திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை பொதுமக்கள் தர்மடி கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சூர்யா தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் 7 மாத ஆண் குழந்தையும் உள்ளன.
இந்நிலையில் திண்டுக்கல் செல்லாண்டியப்பன் கோயில் திருவிழாவில் நேற்று கடன் செலுத்துவதற்காக இரண்டு குழந்தைகளையும் அவருடன் பெரியம்மா கோயிலுக்கு அழைத்து சென்றார். குழந்தையை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த பொழுது இரண்டு குழந்தைகளையும் காணாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எடுத்துக்கொண்டு கோபால்பட்டியை நோக்கி சென்ற பஸ்ஸில் ஏறியதாக சிலர் தெரிவித்தனர் கோபால்பட்டி வந்த பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து குழந்தையை மீட்டனர்.
தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சென்ற குழந்தைகளின் தாய் மாரியம்மாள் தனது இரண்டு குழந்தைகளையும் மகிழ்ச்சியுடன் தூக்கி வந்தது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.