திருக்கோவிலூர் அருகே மனநல மருத்துவமனையில் மர்மமான முறையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் குச்சிபாளையத்தில் உள்ள லோட்டஸ் பவுண்டேஷன் மனநல மருத்துவமனை அமைந்துள்ளது.
இதனை கள்ளக்குறிச்சி முன்னாள் பாஜக மாவட்ட துணை தலைவர் காமராஜ் நடத்தி வருகிறார். கடந்த ஐந்தாம் தேதி சித்தாமூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடி பழக்கத்திலிருந்து விடுபட அங்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் நேற்று மர்மமான முறையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக மாவட்ட துணை தலைவர் காமராஜ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.