--- --:--:-- --

பாஜக மாநில செயலாளர் கைது..மத கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் பதிவு

12

திருவாடானை அருகே பாஜக மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மத கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் பதிவு செய்துள்ளார் .

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே  நம்புதாளை பகுதியைச் சேர்ந்த குருஜி என்பவர் பிஜேபி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது முகநூல் பக்கத்தில்  இஸ்லாமிய குரு தலைவர்களை மையப்படுத்தி அவதூறு பரப்பி பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர் மீது தொண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.  புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

உடன்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாநில செயலாளர் குருஜியை காரைக்காலில் தங்கியிருந்தவரை தொண்டி காவல் நிலையத்தார் கைது செய்தனர்.

 

திருவாடானை நீதிபதி விடுமுறையில் இருப்பதால் ராமநாதபுரம் நீதித்துறை நீதிமன்றம் எண் இரண்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து மேலும் தொண்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon