--- --:--:-- --

அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்..!

8

தாம்பரம் அருகே அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தாம்பரம் அடுத்த சேலையூர் கல்லூரி சாலையில் சென்ற அரசு பேருந்து மாணவர்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

 

சக பயணிகள் மாணவர்களை மேலே ஏறி வருமாறு அழைத்தும் அதனை மாணவர்கள் கண்டுகொள்ளாமல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். அரசு பேருந்து மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon