டேட்டிங் செயலி மூலம் பழகி பணம் பறித்த பெண்..!
புதுச்சேரியில் டேட்டிங் செயலி மூலம் பழகி பணம் பறித்த பெண்மீது சைபர் கிரைம் காவல்துறையில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதில் டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண் பழகியதாகவும் அவருடன் வீடியோ காலில் பேசிய பொழுது இருவரும் ஆடைகள் இன்றி பேசியதை பதிவு செய்து அந்த பெண் தன்னை மிரட்டி எண்பதாயிரம் ரூபாய் பணம் பறித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் மீண்டும் பணம் கேட்பதாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆப்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் இணைய வழியில் ஆபாச புகைப்படங்கள் வீடியோ கால்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





