--- --:--:-- --

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை..தொடரும் அவலம்..!

3

திருப்பூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 3.60 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது மனோஜ் என்பவரது வீட்டில் இருந்து சாராயம் வாங்கி வந்ததாக தெரிவித்தார். அதனையடுத்து மனோஜின் வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லிட்டர் சாராயம் மற்றும் 90 லிட்டர் சாராய ஊரலை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon