திடீரென வீட்டுக்குள் புகுந்து வெளியேற முடியாமல் தவித்த மயில்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கிராமத்தில் ராஜா என்பவரின் வீட்டிற்குள் வந்து வெளியே செல்ல முடியாமல் மயில் தவித்தது. வீட்டுக்கு வந்த மயிலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
இதையடுத்து ராஜா அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





