--- --:--:-- --

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..4 பேர் பரிதாப பலி..!

1

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த 4 ஆண் தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த வெடி விபத்தில் அடுத்தடுத்து இருந்த பட்டாசு தயாரிப்பு அறைகளும் சேதமாகின.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஏற்கனவே கடந்த மாதம் 9 ஆம் தேதி சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon