--- --:--:-- --

10 வயது மகளை காணவில்லை..தாயின் கதறல்..!

9

ஞ்சா விற்பனை செய்வதற்காக மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தனது 10 வயது மகளை மீட்டு தர கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழ் பெண் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழரான பிரியா என்பவர் கணவனை பிரிந்து தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மூத்த மகனை கஞ்சா விற்பனை செய்ய வலியுறுத்தி சிலர் மிரட்டி தாக்கிய நிலையில் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.

 

இதனால் அச்சமடைந்த பிரியா பாதுகாப்பு கருதி மூத்த மகளை விடுதியில் தங்கி படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் மதுரையில் உள்ள உறவினர் கட்டுப்பாட்டில் இருந்த 10 வயது இளைய மகளை சிலர் கடத்தியதாக பிரியா தெரிவித்து வருகிறார்.

 

இது குறித்த புகாரில் போலீசார் ஏற்க மறுப்பதாக கூறும் அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon