--- --:--:-- --

திருவாடானையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மானுவேல் பேரவை சார்பில் போராட்டம்..!

11

திருவாடானையில் இம்மானுவேல் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தை அடுத்து தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

 

திருவாடானையில்   இம்மானுவேல் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவற்றை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த இருந்தனர் .

இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு நிர்வாகிகளுக்கு  காவல் துறை சார்பில் போரட்ட அனுமதி மறுப்பு நோட்டீஸ் நேற்று இரவு நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

இருந்தும் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் திருவாடானை காவல் துறை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலமையில்  போலீசார் தாலுகா அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் தாலுகா அலுவலக வாயிலில் தடுப்புகள் அமைத்து பொதுவான பிரச்சனைகளுக்கு மணு கொடுக்க செல்லும் மக்களை பரிசோதனைக்கு பின்னரே உள்ள செல்ல அனுமதித்தனர்

 

தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டு இம்மானுவேல் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ராமநாதபுரம் சென்றதாக சொல்லப்படுகிறது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon