--- --:--:-- --

மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..!

9

துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

 

பின்னர் பிப்ரவரி 19, 20 ஆம் தேதிகளில் தமிழக அரசின் பொது பட்ஜெட் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில் நாடாளுமன்றம் தேர்தல் அறிவிப்பை நோக்கி மீண்டும் கூடும் தேதி அறிவிக்காமல் பேரவை தள்ளி வைக்கப்பட்டது.

 

தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில் மானிய கோரிக்கைகள் வாதங்களுக்காக சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காலை, மாலை என இரு வேளையும் பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon