மோடி பதவியேற்பு விழாவின் பொழுது பின்னால் வந்தது சிறுத்தையா? புலியா?
குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவின்பொழுது பின்னாடி தென்பட்டது வீட்டு பூனை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவின் பொழுது பின்னணியில் விலங்கு ஒன்று நடமாட்டம் தெரிந்தது.
இதையடுத்து அது கொடிய விலங்கு போல் இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை நிகழ்ச்சியின் போது தென்பட்டது சாதாரண வீட்டுப் பூனை தான் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





