--- --:--:-- --

சாவியோடு நின்ற பைக்கை எடுத்துவிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்..!

7

கேரளாவில் தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதானதால் அதை சாலையோர நிறுத்தி வைத்திருப்பதாகவும் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறும் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

கேரளா மாநிலம் கர்னுல் பகுதியைச் சேர்ந்த தீபு இரவு தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு சாவி எடுக்காமல் அப்படியே விட்டிருக்கிறான். காலையில் எழுந்து பார்க்கும் பொழுது தனது இருசக்கர வாகனம் திருடு போனது அவருக்கு தெரியவந்துள்ளது.

 

இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதையடுத்து படித்த பொழுது இருசக்கர வாகனம் பழுதானதால் அதனை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை குறிப்பிட்டு வந்து எடுத்துக் கொள்ளுமாறு திருடன் கடிதம் எழுதி இருப்பது தெரியவந்தது.

 

அதோடு நண்பர் விபத்தில் சிக்கி இருப்பதாக வந்த அழைப்பால் சாவியோடு நின்ற இரு சக்கர வாகனத்தை அவசரத்திற்காக எடுத்துச் சென்றதாகவும் திருட வேண்டும் என்று நான் திருடாததால் தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் திருடன் கேட்டுக் கொண்டுள்ளான்.

 

இதனையடுத்து திருடன் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு சென்று தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்ட தீபு தான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon