மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்க தொகை..!
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் கோகலை நகரில் கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் இந்திய சார்பில் விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்ற நிலையில் மு.க.ஸ்டாலின் 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





