கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற கார் ஒன்று போடி அருகே மதுரை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பின் மீது மோதி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள் ஒரு சிறுவன் என 7 பேர் காரில் பயணித்த நிலையில் அதில் சஞ்சீவி ரெட்டி என்பவன் உயிரிழந்தான். மற்றவர்கள் லேசான காயங்களுடன் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





