--- --:--:-- --

கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கிடந்த ஆசிரியர் உடல்..!

3

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியராக விக்டர் என்பவர் பணியாற்றினார். கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இவரை காணவில்லை.

 

பல்வேறு இடங்களிலும் தேடிய அவரது தாய் கடந்த 28ஆம் தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விக்டரின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். கடைசியாக அவரிடம் பேசிய குறிஞ்சிப் பாடியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்பவரை பிடித்தனர்.

 

அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது ஆசிரியரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி நெய்வேலி தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் வீசிவிட்டதாக தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்த விக்டரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன்னுடைய உறவுக்கார பெண்ணுக்கு விக்டர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததாக தக்ஷிணாமூர்த்தி கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon