பெண்ணின் வயிற்றில் இருந்து 2.5 கிலோ முடி அகற்றம்..!
உத்திரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றில் இருந்து 2.5 கிலோ முடி அகற்றப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் கர்ப்பமாக இருந்த பொழுது முடி உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார். தமது முடி மட்டும் இன்றி கீழே இருந்த முடிகளையும் சாப்பிட்டுள்ளார்.
குழந்தை பிறந்த பின் முடி உண்ணும் பழக்கத்தை அவர் கைவிட்டாலும் தீராத வயிற்று வலியால் அவரது மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் சோதித்த பொழுது இரைப்பை முழுவதும் முடி இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரது வயிற்றிலிருந்து 2.5 கிலோ முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





