--- --:--:-- --

மரத்தில் பழம் பறித்ததால் தகராறு.. சிறுவர்களின் தாத்தா வெட்டி கொலை..!

10

ங்கராபுரம் அருகே சிறுவர்கள் பழம் பறித்த விவகாரத்தில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம்.

 

இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளையராஜாவின் மரத்திலிருந்து சண்முகத்தின் பேரக் குழந்தைகள் பழம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த இளையராஜா அந்த குழந்தைகளை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது தாத்தா வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

 

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சண்முகம் உயிரிழந்தார். சங்கராபுரம் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon