எச்சில் துப்ப பேருந்து ஜன்னலில் தலையை விட்ட பெண்.. ஜன்னலில் தலை மாட்டிக் கொண்டதால் பரபரப்பு..!
அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் எச்சில் துப்புவதற்கு ஜன்னல் வழியாக தலையை நீட்டிய பொழுது அவரது தலை ஜன்னலில் சிக்கிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. தலையை உள்ளே இழுக்க முயன்ற பொழுது முடியாததால் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து டிரைவர், நடத்துனர் மற்றும் சக பயணிகள் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பெண்ணின் தலையை ஜன்னலில் இருந்து மீட்டனர். இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





