ஆள் கடத்தல் வழக்கில் கைதான எச்.டி.ரேவண்ணாவுக்கு திடீர் நெஞ்சு வலி..!
ஆள் கடத்தல் வழக்கில் கைதான கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ரேவண்ணா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மகனுமான ரேவண்ணா மற்றும் அவருடைய மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பெண் பாலியல் புகார் அளித்தார்.
ரேண்ணாவை காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். நேற்றிரவு வயிறு வலி, நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ரேவண்ணா சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





