ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு.. ரூ.20க்கு 7பூரிகளுடன் மசாலா கிழங்கு..!
ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ஐஆர்சிடிசி விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்கள் அனைத்திலும் ஐஆர்சிடிசி உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணிப்போருக்கு பயனளிக்கும் வகையில் 20 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தினை சோதனை முறையில் ஐஆர்சிடிசி சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது.
20 ரூபாய்க்கு ஏழு பூரிகளுடன் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் ஊறுகாய் தரப்பட்டது. இந்த நிலையில் மளிகை விலை உணவினை முழு ரயில் நிலையங்களுக்கு ஐஆர்சிடிசி விரிவுபடுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





