--- --:--:-- --

பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதல்வர் சொன்ன அறிவுரை..!

1

உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும் என பிளஸ் 2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள், 3 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஒரு திருநங்கை உட்பட, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

 

இவர்களில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்களும் அடங்குவர். கடந்த மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. திட்டமிட்டப்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில், பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்துள்ள செல்ஃபோன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

 

 

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்.

 

இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்துக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு துணை நிற்கும்.” எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon