--- --:--:-- --

கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்த நபர்.. பட்டப்பகலில் பெண் அறுத்துக் கொலை..!

13

கோவில் நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபர் 40 வயது பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு மூன்று சவரன் தங்க நகையை திருடி சென்றார்.

 

கொலை செய்யப்பட்ட ரேணுகாவின் கணவரும், இரண்டு மகள்களும் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது இரத்த வெள்ளத்தில் உடல் கிடந்ததை பார்த்தனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் டிஎஸ்பி நமச்சிவாயம் உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon