3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்.. பிரச்சாரம் நிறைவடைந்தது..!
பாராளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
இதையடுத்து 3-ம் கட்டமாக அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது.
19-ந்தேதி மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு பெற்றது.
3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




