ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது..!
ஜேஇஇ முதன்மை தேர்வு 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். நாட்டின் முதன்மை கல்லூரி ஊடகங்களான ஐஐடி என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வில் 56 மாணவர்கள் முழுமதிப்பெண்ணான 100 மதிப்பெண்ணை பெற்று சாதனை படைத்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த 15 மாணவர்கள் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா ஏழு மாணவர்கள் உட்பட 56 மாணவர்கள் முழுமதிப்பெண்ணை பெற்றுள்ளனர். ஜேஇஇ முதன்மை தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இரு கட்ட தேர்வுகளுக்கு பிறகு அந்த மதிப்பெண்களில் சிறந்ததை கருத்தில் கொண்டு தேர்வர்களின் தரவரிசை வெளியிடப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





