விவாகரத்து கோரி விண்ணப்பித்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி..!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து அவர்களே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.
இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டதாகவும் ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் இருவரும் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




