மிச்சர் வாங்க முண்டியடித்த தொண்டர்கள்.. காரசார காட்சிகள்..!
வேலூரில் நடைபெற்ற பாஜக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்தவர்கள் மிச்சர் பொட்டலம் வாங்க முண்டியடித்தனர். வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட உள்ளார்.
இதற்காக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கே.வி. குப்பத்தில் நடைபெற்றது. வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் இருந்த பலர் வேறு இடத்தில் முகாம் இட்டிருந்தனர்.
அங்கு குட்டியானையில் வைத்து விநியோகிக்கப்பட்ட மிச்சர் இனிப்பு பொட்டலங்களை வாங்க அவர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். வாகனத்தில் ஏறிய சிலர் தமக்கு தெரிந்தவர்களின் கைகளை பார்த்த பொட்டலங்களை தூக்கி எறிந்து கொண்டிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





