--- --:--:-- --

தப்பித்து ஓடிய ரவுடிகள்.. போடப்பட்ட மாவு கட்டு..!

6

மிழ்நாட்டில் இரு வேறு இடங்களில் காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மூன்று ரவுடிகள் கீழே விழுந்து காலில் மாவு கட்டுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 11 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் இருவர் காவல் நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்றனர்.

 

அப்பொழுது தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் காரில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஷங்கர் என்பவரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

 

அப்பொழுது காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வெட்டு சங்கர் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon