ஜப்பான் நாட்டில் கொழுப்பு சத்தை குறைக்க மருந்து சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். ஜப்பானை சேர்ந்த கோபாலியா சிங் என்ற நிறுவனம் ஊட்டச்சத்து மாத்திரைகளை அறிமுகப்படுத்தி இருந்தது.
உடலில் கொழுப்பு சத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை சாப்பிட்ட பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.