--- --:--:-- --

குழந்தைகளை விரட்டிய நாயை கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகி..!

3

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குழந்தைகளை விரட்டிய நாயை கொலை செய்த இரு முன்னணியின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். வடமதுரை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

 

பாண்டியம்மாள் என்பவர் வளர்த்திருந்த நாய் ஒன்று ஈஸ்வரனின் குழந்தைகளை கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஈஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

 

இது குறித்து நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon