--- --:--:-- --

மதுரை சித்திரை திருவிழா.. உணவு பாதுகாப்பு துறை புதிய உத்தரவு..!

2

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முன்பதிவு செய்து சான்றிதழ் தரவேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சித்திரை திருவிழாவின் பொழுது கள்ளழகர் எழுந்தருளும் மண்டப பணிகள் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டத்தின் பொழுது மாசி வீதியில் தற்காலிக கடைகள் அமைத்து குளிர்பானங்கள், உணவுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

 

அதேபோல் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்படும், உணவு பாதுகாப்பு துறை பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் எனவும் அன்னதானம் வழங்கும் நபர்கள் இணையதளத்தில் சென்று 100 ரூபாய் கட்டணமாக செலுத்தி அனுமதி சான்றை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon