தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதிமுக, பாஜகவினர் மீது வழக்கு..!
உதகையில் வேட்பு மனு தாக்கலின் போது அதிமுக, பாஜக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவத்தில் இரு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேல்முருகன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்ய உதகை சதுக்கட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
அப்பொழுது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி இரு கட்சி தொண்டர்களையும் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது உதகை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்ட அந்த கட்சியை சேர்ந்த 20 பேர் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





