--- --:--:-- --

பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம்..!

1

புதுச்சேரியில் அருள்மிகு முத்துக்குமாரசாமி ஆலயம் பங்குனி உத்திர திருவிழாவில் 10 லிட்டர் மிளகாய் பொடி கரைசல் போட்டு அபிஷேகம் செய்து முருக பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

 

முருகம்பாக்கம் திரௌபதி அம்மன் கோயிலில் உள்ள முத்துக்குமாரசாமி ஆலயத்தில் 52 வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தீவிரமுருக பக்தரான சுந்தரமூர்த்தி என்பவர் மிளகாய் பொடி அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினார்.

 

இளநீர் அபிஷேகம், பாலாபிஷேகம், சங்கராபிஷேகம், பன்னீர் அபிஷேகத்தை தொடர்ந்து மிளகாய் பொடி கரைசல் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. தண்ணீரில் மிளகாய் பொடி கரைக்கப்பட்ட பக்தரின் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon