--- --:--:-- --

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி உயிரிழப்பு..!

2

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலி உயிரிழந்தது. சேலம் எடக்காதோடு பகுதியிலுள்ள விவசாய தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புலி ஒன்று கடந்த ஒரு வாரமாக சுற்றி திரிந்தது.

 

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புலி பாதிக்கப்பட்ட நிலையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சிகள் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. ஆனால் புலியின் அடுத்த இடம் பெயர்ந்து கொண்டதால் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி படிக்க முடியவில்லை. இந்த நிலையில் புலிகள் பிடிப்பதற்காக மூன்று கூண்டுகளும் வைக்கப்பட்டன.

 

இதில் சுமார் 4 மணி அளவில் மருத்துவ குழுவினர் புலிக்கு வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தினர். மீட்கப்பட்ட புலி முதல்கட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் புலியின் உடல் நிலையை ஆய்வு செய்தனர்.

 

அதில் பிடிக்கப்பட்ட ஆண் புலிக்கு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தது தெரிய வந்தது. புலி மிகவும் சோர்வுடன் காணப்பட்ட நிலையில் அதற்கு விதிமுறை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இரவு 9 மணி அளவில் புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்து இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon