காலி குடங்களுடன் வீதியில் இறங்கிய மக்கள்..!
புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதை ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





