சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பேருந்து..!
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்சாதன உதிரி பாகங்கள் இருக்கும் கடைக்குள் புகுந்தது விபத்தில் கடையோர நிறுத்தி இருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும் பேருந்து பயணிகள் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து அரசு போக்குவரத்து கழகம் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





