--- --:--:-- --

இன்ஸ்டாவில் முளைத்த காதலால் பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்..!

10

instagram மூலம் பழகிய பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு பணம், நகை, பறிப்பு இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக அரியலூரை சேர்ந்த அருள் குமாரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அருண்குமாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் இருந்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் சிறுமியின் அம்மாவிற்கு தெரியாமல் ஏடிஎம் கார்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அருண்குமார் எடுத்துள்ளார்.

 

மேலும் நடந்தவற்றை வெளியில் சொன்னால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்து விடுவதாக கூறி அருண்குமார் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிய வர புகாரின் பேரில் அருண்குமார் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon