--- --:--:-- --

மார்ச் 15,16,18 தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மெகா சுற்றுப் பயணம்..!

1

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதே நேரம் பாஜக சார்ந்த கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.

 

இந்தாண்டில் மட்டும் பிரதமர் மோடி 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். பிரதமரின் தமிழ்நாட்டு வருகையை ஆளும் திமுக அரசு கடுமையாக விமர்சித்தும் வருகிறது. இந்த நிலையில் வரும் 15, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

வரும் 15 ஆம் தேதி சேலத்துக்கு பிரதமர் மோடி வர இருப்பதாகவும். அடுத்த நாளே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதேபோல் 18 ஆம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி சென்னையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

 

இந்நிலையில் வரும் 15,16 தேதிதளில் தமிழகத்தில் இருக்கும் பிரதமர் மோடி 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு மீண்டும் வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்ற இருப்பதாக நியுஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவலை கிடைத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் பிரதமரின் அடுத்தடுத்த தமிழ்நாட்டு வருகை, களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon