--- --:--:-- --

எங்க அப்பா அம்மாவை தூக்கில் போட்டாலும் தப்பில்லை..காதல் திருமணத்தால் நேர்ந்த விபரீதம்..!

8

ரோடு அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவியை வாகனம் ஏற்றிக் கொலை செய்த சம்பவத்தில் தாய் தந்தையை தூக்கிலிட வேண்டும் என மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சத்தியமங்கலம் அருகே ஏரன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த சுபாஷ், மஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். சுபாஷ் தங்கை பத்தாம் வகுப்பு படிக்கும் ஹாசினியை சக்தி மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

 

அப்பொழுது மஞ்சுவின் தந்தை பிக்கப் வேனை வைத்து மோதியதில் ஹாசினி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சந்திரன் அவரது மனைவி சித்ரா உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தனது தாய். தந்தையை தூக்கிலிட வேண்டும் என மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon