ஓட்டுனர்களுக்கு சர்ப்ரைஸ்.. தங்கம், வெள்ளி பரிசாக வழங்கிய அமைச்சர்..!
தென்காசியில் 11 புதிய பேருந்துகளை துவக்கி வைத்து விபத்து இல்லாமல் பணிபுரிந்த ஓட்டுனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கி பாராட்டினார்.
தென்காசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 25 வருடம் விபத்து இல்லாமல் பணியாற்றி இரண்டு பேருக்கு தங்க நாணயம் மற்றும் 10 வருடம் விபத்தில் இல்லாமல் பணியாற்றிய 43 பேருக்கு வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்தாண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடம் பக்தர்கள் சிரமமின்றி சென்றுவர அதிக பேருந்துகள் இயங்கும் வண்ணம் தமிழக அரசு சார்பாக கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





