--- --:--:-- --

கருங்காலி மாலை வாங்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்..!

4

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கருங்காலி மாலை வாங்க சென்றவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மானாமதுரை அடுத்த பொன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், சிவகங்கை உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

இந்நிலையில் இவர் கருங்காலி மாலை வாங்குவதற்காக மானாமதுரை உள்ள விஜய மார்த்தாண்டம் என்பவரது நகை கடைக்கு சென்று உள்ளார். அப்பொழுது நகை பட்டறை உரிமையாளருக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

 

திடீரென நகை பட்டறை உரிமையாளர் விஜய் மார்த்தாண்டம் சதீஷ்குமார் மீது ஆசிட் வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon