சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஜிஓடி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் கடுமையான அணுகுமுறையை கையாண்டு வருவதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடைய போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது எந்த வகையான நடவடிக்கையும் மேற்கொள்வது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்களின் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.