இரண்டு நாள் சுற்றுலா சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கிரீஸ் நாட்டு பிரதமரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ள கிரீஸ் பிரதமர் ராஜ் காட்டில் உள்ள புத்தகத்தில் கையெழுத்து இட்டவுடன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளது தனக்கு கிடைத்த கௌரவம் என கிரீஸ் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.